மதுரை–திண்டுக்கல் மல்லுக்கட்டு: பைனலுக்கு செல்வது யார் | ஆகஸ்ட் 12, 2019

தினமலர்  தினமலர்
மதுரை–திண்டுக்கல் மல்லுக்கட்டு: பைனலுக்கு செல்வது யார் | ஆகஸ்ட் 12, 2019

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் தகுதிச்சுற்று– 2ல் திண்டுக்கல், மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் நான்காவது சீசன் நடக்கிறது. இன்று திண்டுக்கல் என்.பி.ஆர்., மைதானத்தில் நடக்கும் தகுதி சுற்று–2ல் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சென்னையில் நடக்கும் பைனலில்(ஆக.15) சேப்பாக்கம் அணியுடன் மோதும். 

உள்ளூர் சாதகம்: கடந்த முறை  பைனலில் மதுரையிடம் கோப்பையை இழந்த திண்டுக்கல் அணி இம்முறை அனுபவ வீரர் அஷ்வின் தலைமையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது. தகுதிச்சுற்று–1ல் தோற்றதால், நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியவில்லை. இன்று சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் ‘நம்பர்–1’ ஆக உள்ள ஜெகதீசன் (398), 5வதாக உள்ள ஹரி நிஷாந்த் (267)  கைகொடுத்தால் எளிய வெற்றி பெற்று பைனலுக்கு செல்லலாம். பவுலிங்கில் 11 விக்கெட் சாய்த்த சிலம்பரசன், கவுஷிக் (8 விக்.,), கேப்டன் அஷ்வின் (8 விக்.,) சிறப்பான பார்மில் உள்ளது பலம்.

பவுலிங் பலம்: மதுரை அணி சார்பில் அருண் கார்த்திக் (345 ரன்), கவுசிக் (155) மட்டுமே தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. சரத் ராஜ் (131), நிலேஷ் சுப்ரமணியன் (59 ள்) பார்முக்கு திரும்பினால் பலமாக அமையும். பேட்டிங்கில் சற்று பலவீனமாக உள்ள மதுரை அணி, பவுலிங்கில் அசத்துகிறது. கிரண் ஆகாஷ் (15 விக்.,) ராகில் ஷா (12 விக்.,), செல்வகுமரன் (7 விக்.,) தன்வர் (7 விக்.,) நம்பிக்கை தருகின்றனர்.

 

மூலக்கதை